Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால்… இதுவரை 300 மின் கம்பங்கள் சேதம்… மின்வாரிய அதிகாரிகள் தகவல்…!!!

சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் இதுவரை 300-க்கும் அதிகமான மின்கம்பங்கள் சேதம் அடைந்ததாக மின்வாரிய அதிகாரிகள் கூறினார்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 3 தினங்களாக சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இந்த கனமழையால் மின் கம்பிகள் மீது மரங்கள் முறிந்து விழுந்ததில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் கிருஷ்ணகிரி உட்பட பல்வேறு இடங்களில் நான்கு மணி நேரம் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது, கிருஷ்ணகிரி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த மூன்று மாதங்களாக பராமரிப்பிற்காக மின் நிறுத்தம் செய்யவில்லை. மேலும் கடந்த 2 தினங்களாக அடித்த சூறாவளி காற்றினால் கிருஷ்ணகிரி நகரில் மட்டும் 50 -க்கும் அதிகமான மின் கம்பங்கள், மரங்கள் சாய்ந்தன. இவற்றை ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகின்ற நிலையில், மின் கம்பிகளில் உள்ள இன்சுலேட்டர் வெடித்து விடுவதால் அதையும் ஆராய்ந்து மாற்றும் பணி நடைபெறுகிறது. இதுவரை 300 -க்கும் அதிகமான மின் கம்பங்கள் சேதம் அடைந்துள்ள நிலையில்  அனைத்தும் மாற்றியமைக்கப்பட்டு தடையில்லாமல் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று தெரிவித்தனர்.

Categories

Tech |