தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.இந்நிலையில் தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இன்று நீலகிரி, கோவை, கடலூர், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மற்றும் வேலூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களிலும், நாளை சென்னை,காஞ்சி மற்றும் திருவள்ளூர் லிட்டர் 14 மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் எனவும் ஆந்திர கடலோர பகுதி மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடற் பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.