Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சூறாவளி காற்று வீசுவதால்…. மீனவர்களுக்கு கடலுக்கு செல்ல தடை…. ஏற்றப்பட்ட புயல் எச்சரிக்கை கூண்டு….!!

வங்ககடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ள நிலையில் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ள நிலையில் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு மழை மற்றும் கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இதனால் ராமேஸ்வரம், பாம்பன், தனுஷ்கோடி, தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல மீன்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். எனவே அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் தங்களது நாட்டுப்படகு விசைப்படகு என 900க்கும் மேற்பட்ட படகுகளை துறைமுக பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தி வைத்துள்ளனர்.

Categories

Tech |