Categories
உலக செய்திகள்

சூறாவளி போன்று கொசுக்கூட்டம்… திகைத்து போன வாகன ஓட்டுனர்கள் ..!!வைரலாகும் வீடியோ ..!!

அர்ஜென்டினாவில் சாலையில் சூறாவளி போன்று கொசு கூட்டங்களை  கண்ட வாகன ஓட்டுனர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அர்ஜென்டினாவில் சாலையில் வாகனங்கள் சென்று கொண்டிருக்கும் போது பெரிய சூறாவளி போன்று ஏதோ தென்பட்டுள்ளது .அதனை கண்டு வாகன ஓட்டிகள் நெருங்கிச் செல்லும்போது அது கொசு கூட்டம் என்பது தெரியவந்தது .உடனே அதை கண்ட வாகன ஓட்டிகள் திகைத்துப் போய் உள்ளனர். அதனை சிலர் வீடியோவாக எடுத்து இணையதளத்தில் பதிவிட்டுள்ளனர்.இது குறித்து அர்ஜென்டினா ஆய்வக அறிவியலாளர் ஒருவர் மழையால் தேங்கி நீக்கப்பட்ட வெள்ளத்தால்  கொசுக்கள் ஏற்பட்டு இருக்கலாம் .

 

இதனால் மனிதர்களுக்கு பாதிப்பு இருக்காது என்றும் , யாரும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறியுள்ளார். மேலும் இதனை உடனடியாக அழிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை .ஏனென்றால் அது தானாகவே 15 நாட்களில் உயிரிழந்து  விடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |