Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சூறைக்காற்றால் விழுந்த மேற்கூரை….. தந்தை-மகன் படுகாயம்….. மதுரையில் பரபரப்பு…!!

சூறைகாற்றில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் தந்தை-மகன் 2 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. மேலும் டி.குன்னத்தூர் பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் சுற்றியுள்ள கிராமங்களில் இருக்கும் 50-க்கும் மேற்பட்ட மரங்கள், இரண்டு மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தது. இந்நிலையில் பெருமாள்பட்டி காலனி தெருவில் வசிக்கும் விஸ்வரூபன் என்பவருக்கு சொந்தமான வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த விஸ்வரூபன் மற்றும் அவரது மகன் யாசிகன் ஆகிய இருவரையும் அருகில் உள்ளவர்கள் மட்டும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறையினர் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று பார்வையிட்டுள்ளனர்.

Categories

Tech |