சூறைக்காற்றில் அரசு பள்ளியின் மேற்கூரை சேதமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வீரநாராயணமங்கலம் பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 34 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் இருக்கும் கான்கிரீட் கட்டிடத்தில் 2 வகுப்புகளும், ஓட்டு கட்டிடத்தில் 3 வகுப்புகளும் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று காலை ஓட்டு கட்டிடத்தின் மேற்கூரை ஓடுகள் மழை மற்றும் சூறைகாற்றால் பறந்து விழுந்து கிடப்பதை பார்த்து ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
மேலும் வகுப்பறைக்குள் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் ஆசிரியர்கள், மாணவர்களை கான்கிரீட் கட்டிடத்திற்கு அழைத்து சென்று பாடம் நடத்தியுள்ளனர். அந்த கட்டிடமும் சற்று பழுதடைந்து இருப்பதால் ஆசிரியர்களும், மாணவர்களும் அச்சத்தில் உள்ளனர்.