தர்மபுரி மாவட்டத்தில் பொன்னகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வீசிய சூறைக்காற்றால் ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் சேதம் அடைந்தது.
தர்மபுரி மாவட்டத்தில் நேற்று இரவு வீசிய சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பயிரிடப்பட்ட 100 ஏக்கர் வாழை மரங்கள் காற்றில் விழுந்து சேதமடைந்தன. தர்மபுரி மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளான எரியூர், மலையனூர், புது நாகமரை, நெல்லூர் ஆகிய பகுதிகளில்வாழை மரங்கள் பயிரிடபட்டுள்ளன. நேற்று இரவு திடீரென பெய்த கனமழையால் வாழை மரங்கள் காற்றில் சாய்ந்தன.
இந்த சூறைக்காற்றால் ஆயிரக்கணக்கான வாழைமரங்கள் மண்ணில் சாய்ந்தன. இதனால் வாழைமரங்களை பயிரிட்ட விவசாயிகள் பெரும் மன வருத்தத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த சேதத்திற்கு தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.