Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சூறைக்காற்றுடன் பெய்த கனமழை…. பரிதாபமாக இறந்த பசுமாடு…. வேதனையில் குடும்பத்தினர்….!!

மின்னல் தாக்கியதால் பசுமாடு இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள தாளவாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் கடுமையாக இருப்பதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது.

நேற்று முன்தினம் மாலை 3 மணி அளவில் திடீரென சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. அப்போது எரகனகள்ளி கிராமத்தில் வசிக்கும் விவசாயியான சித்தன் என்பவருக்கு சொந்தமான பசுமாடு மின்னல் தாக்கியதால் பரிதாபமாக உயிரிழந்தது.

Categories

Tech |