Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சூறைக்காற்றுடன் பெய்த மழை… ஆர்ப்பரித்து கொட்டி அருவி… விவசாயிகள் மகிழ்ச்சி..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் நேற்று முன்தினம் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் சீரான இடைவெளியுடன் கடந்த ஒரு மாத காலமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் கருமேகங்களுடன் சிறிது நேரத்தில் பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கன மழை பெய்தது. மேலும் ஒரு மணி நேரம் பெய்த இந்த கனமழையால் மழை நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. இந்த கனமழையால் பாம்பன் அருவி, வெள்ளி நீர்வீழ்ச்சி ஆகியவற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Categories

Tech |