Categories
மாநில செய்திகள்

சூறைக்காற்று… கடல் கொந்தளிப்பு… மக்களே எச்சரிக்கை…!!!

அரபிக் கடலில் மேல்அடுக்கு சுழற்சி உருவாக உள்ளதால் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்க கடலில் உருவான புரெவி புயல் இலங்கை அருகே கரையைக் கடந்தது. அதன் பிறகு கன்னியாகுமரி மற்றும் பாம்பன் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென புயல் பின்வாங்கி தற்போது ராமநாதபுரம் அருகே குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மையம் கொண்டுள்ளது. இருந்தாலும் புயல் எதிரொலியாக பல்வேறு இடங்களில் தொடர் மழை பெய்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் அரபிக்கடலில் மேலடுக்கில் சுழற்சி உருவாக உள்ளதால் மீனவர்களுக்கும் பொதுமக்களுக்கும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மணிக்கு 55 கிமீ வேகத்தில் பலத்த சூறை காற்று வீசும் என்பதால் கன்னியாகுமரி மற்றும் அரபி கடலில் கொந்தளிப்பு ஏற்படும். அதனால் குமரி கடல் மற்றும் மன்னார் வளைகுடாப் பகுதி களுக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அது மட்டுமன்றி பொதுமக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறாமல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |