பொது சொத்துக்களை சூறையாடுவோரை கண்டதும் சுட சொல்லி இலங்கை பாதுகாப்பு துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கை நாட்டில் பொது சொத்துக்களை உரிமை கூறி சூறையாடுவோரை கண்டதும் சுட சொல்லி அந்நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்நாட்டு அமைச்சர்கள் எம்.பி.க்கள் உள்ளிட்டவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்து அவர்களின் சொத்துக்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.
இதனை அடுத்து சில இடங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தது மட்டுமல்லாமல் சக குடிமக்களைத் தாக்குவோரையும் சுட்டுத்தள்ள முப்படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் காலே மாவட்டத்தில் உள்ள ரத்காமாவில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் இதனை தொடர்ந்து நீர்கொழும்புவில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.