செகந்திராபாத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் நீட்டிக்கப்பட்டுள்ளது.
செகந்திராபாத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கு வாரம்தோறும் செவ்வாய் கிழமையன்று 9.25 மணிக்கும், ராமேஸ்வரத்திலிருந்து செகந்திராபாத்திற்க்கு வியாழக்கிழமை தோறும் இரவு 11.55 மணிக்கும் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த இரு ரயில்களும் ஏப்ரல் வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது பயணிகளின் கோரிக்கையை ஏற்று இந்த ரயில்களின் போக்குவரத்து மேலும் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. செகந்திராபாத்தில் இருந்து ஏப்ரல்5 முதல் ஜூலை 26 வரையும், ராமேசுவரத்தில் இருந்து ஏப்ரல் 7 முதல் ஜூலை28 வரையும் இந்த ரயில்கள் இயங்கும். மேலும் இதற்கான முன்பதிவு துவங்கிவிட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.