இந்திய சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட வ உ சிதம்பரனார் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது சிறையில் அவரை சித்திரவதை செய்யும் நோக்கத்தில் செக்கு இழுக்க வைக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் இழுத்த செக்கு அங்குள்ள சிறை வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் வ உ சிதம்பரனார் 151 வது பிறந்தநாள் விழாவை கோவை மத்திய சிறையில் இன்று காலை நடைபெற்றுள்ளது. இதனை ஒட்டி சிததம்பரனார் இழுத்த செக்கு மற்றும் அவருடைய மார்பளவு சிலை உருவப்படம் பூக்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. இதில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு வ உ சிதம்பரனார் இழுத்த செக்கு மற்றும் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளனர். மேலும் இதில் கலெக்டர் சமீரன் கோவை சிறைத்துறை டிஐசி சண்முகசுந்தரம் சிறை சூப்பிரண்டு ஊர்மிளா உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர். இதே போல பல்வேறு அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் வ உ சிதம்பரனார் செக்குக்கு மரியாதை செலுத்தியுள்ளனர்.
Categories