Categories
தேசிய செய்திகள்

செக்புக் வாங்க போறீங்களா….? இனி உங்கள் விருப்பம் தான்….. பிரபல வங்கி புதிய அறிவிப்பு….!!

புதிய செக் புக் பதிவு செய்வதற்கான அறிவிப்பு ஒன்றை எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ளது. 

அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுக்கான புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டதையடுத்து, அனைத்து வங்கிகளும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது புதுப்புது அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில்,

புதிய செக் புக் பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் இனி தாங்கள் விரும்பும் முகவரியில் செக் புக்கை பெற்று கொள்ளலாம் என எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. இன்டர்நெட் பேங்கிங் மூலம் செக் புக் பதிவு செய்யும் போது தங்களுக்கு வேண்டிய முகவரியை கொடுக்கலாம். இதன் மூலம் வங்கி கணக்கு வைத்திருக்கும் ஊர் முகவரிக்கு சென்று செக் புக்கை வாங்க வேண்டியதில்லை என கூறியுள்ளது. 

Categories

Tech |