குறைந்த வட்டியில் தனி நபர் கடன் வழங்கும் வங்கிகளின் பட்டியலை பற்றி இதில் தெரிந்துகொள்வோம்.
கடன் வாங்கும்போது அதற்காக வங்கிகளில் ஏதாவது பிணை காட்ட வேண்டும். ஆனால் காட்ட முடியாதவர்கள் கடன் வாங்குவதற்கு தனிநபர் கடன் ஒரு சிறந்த வழி. ஏனெனில் தனி நபர்களுக்கு பிணை தேவை கிடையாது. பிணை தேவை இல்லை என்பதற்காக தனிநபர் கடன்களுக்கு வட்டி விகிதம் அதிகமாக உள்ளது. தனிநபர் கடன் வாங்குவதற்கு முன்பு ஒரு ஆராய்ச்சி செய்ய வேண்டும்.
தனி நபர் கடன்களுக்கான வட்டி விகிதம் ஒவ்வொரு வங்கிக்கும் மாறுபடும். எனவே எந்த வங்கியில் என்ன வட்டி விகிதம் வசூல் செய்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றாற்போல் விண்ணப்பிக்க வேண்டியது மிகவும் அவசியம். குறைந்த வட்டிக்கு தனிநபர் கடன்களை வழங்கும் சில வங்கிகளை பற்றி தெரிந்து கொள்வோம்.
ஐடிபிஐ வங்கி : 8.15-14%
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா : 8.90 – 13%
பஞ்சாப் நேஷனல் வங்கி : 8.90 – 14.45%
இந்தியன் வங்கி : 9.05 – 13.65%
பஞ்சாப் சிந்த் வங்கி : 9.35 – 11.50%
கரூர் வைஸ்யா வங்கி : 9.40 – 19%
பேங்க் ஆஃப் மகாராஷ்ட்ரா : 9.45 – 12.80%
சிட்டி யூனியன் வங்கி : 9.50%
எஸ்பிஐ : 9.60 – 15.65%
பேங்க் ஆஃப் பரோடா : 9.75 – 15.60%