இயக்குநர் எஸ். ஏ.சந்திரசேகர் விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக ஆரம்பித்து பின் அதிலிருந்து விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது .
தளபதி விஜயின் அப்பாவும் இயக்குனருமான எஸ். ஏ. சந்திரசேகர் சமுத்திரகனியை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். இவர் விஜய்யின் மக்கள் மன்றத்தில் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார். மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக ஆரம்பிக்க தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருக்கிறார். உடனே இதுகுறித்து விஜய் எனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என் பெயரை அவர் உபயோகித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என நோட்டீஸ் விட்டார் .மகனே அப்பாவை எதிர்த்து இவ்வாறு செய்ததாலும், விஜய் ரசிகர்களின் ஆதரவுக்காகவும் இயக்குனர் சந்திரசேகர் தேர்தல் ஆணையத்தில் இருந்து பதிவுக்கான விண்ணப்பத்தை வாபஸ் பெற்றுள்ளார் .
இதற்கிடையே விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை மாற்றி புதியவர்களை நியமித்தார். இந்த பிரச்சனையால் அப்பாவுக்கும் மகனுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அவர்’ செக்யூர் அவர் சிட்டி’ என்ற புதிய அமைப்பை மக்களின் பாதுகாப்பிற்காக தொடங்கியுள்ளார். இதுகுறித்து விரிவான அறிக்கை விரைவில் வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.