Categories
தேசிய செய்திகள்

செக் பயன்படுத்துவோர் கவனத்திற்கு…. புது விதிகள் அறிமுகம்…. உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

வங்கி காசோலையை பயன்படுத்துபவர்களுக்கு என்று ஒரு புது விதியானது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. அதாவது நிதியமைச்சகம் செக் பவுன்ஸ் வழக்குகளை சரிசெய்வதற்காக, காசோலை வழங்குபவரின் மற்றொரு கணக்கில் இருந்து பணத்தைக் கழிப்பது மற்றும் இது போன்ற சூழலில் புது கணக்குகளைத் திறப்பதைத் தடுப்பது ஆகிய பல்வேறு நடவடிக்கைகள் பற்றி பரிசீலனை செய்து வருகிறது. நீண்டகாலமாகவே செக் பவுன்ஸ் வழக்குகள் அதிகரித்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு நிதியமைச்சகம் அண்மையில் ஒரு உயர்மட்டக் கூட்டத்தைக் கூட்டியது. அக்கூட்டத்தில் இது தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டது.

இதனிடையில் செக் பவுன்ஸ் ஆகும் பட்சத்தில், அதை வழங்கிய நபரின் கணக்கில் பணத்தை கழிப்பதற்கு அக்கணக்கில் போதிய பணமில்லை என்றால், அவரது மற்றொரு கணக்கிலிருந்து தொகையை கழிப்பது போன்ற நடவடிக்கைகள் எடுக்க பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளது. செக் பவுன்ஸ் வழக்கை கடனைத் திருப்பிச் செலுத்தாததாக கருதி கடன் நிறுவனங்களுக்கு புகார் அளிப்பது, அந்த நபரின் சிபில் மதிப்பெண் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

நிதி அமைச்சகம் இம்முறையை நடைமுறைப்படுத்தும் போது பணம் செலுத்துபவர் காசோலையை செலுத்தவேண்டிய கட்டாயத்தில் இருப்பார் மற்றும் இவ்விஷயத்தை நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்ல வேண்டிய தேவையில்லை. இதன் மூலமாக கணக்கில் பணமில்லாமல் இருக்கும் போதும் வேண்டும் என்றே காசோலைகளை வழங்குவது தடுக்கப்படும். செக் பவுன்ஸ் வழக்கானது நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படலாம். இங்கு செக்கை வழங்கியவருக்கு 2 மடங்கு அபராதம் விதிக்கப்படலாம் (அ) 2 வருடங்கள் வரை சிறைத்த ண்டனை (அ) இரண்டும் சேர்த்தும் விதிக்கப்படலாம். அத்துடன் செக் பவுன்ஸ் நிலவினால் காசோலை கொடுத்த நபருக்கு வங்கியில் பணம் எடுக்க சில தினங்களுக்கு தடையும் விதிக்கப்படலாம்.

Categories

Tech |