Categories
தேசிய செய்திகள்

செக் பவுன்ஸ்: வரப்போகும் புதிய விதிமுறைகள் என்னென்ன?…. இதோ வெளியான தகவல்….!!!!

Online பரிவர்த்தனை அதிகரித்து வரும் நிலையிலும், செக் என்பது தற்போதும் பயன்பாட்டில் தான் இருக்கிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக செக் தான் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டது. பணமெடுக்க வேண்டும், பணம் டெபாசிட் செய்ய வேண்டும், மற்றவரிடம் பேமெண்ட் பெறவேண்டும் (அல்லது) கொடுக்கவேண்டும் என அனைத்து  வங்கி பரிவர்த்தனைகளுக்கும் காசோலைகள்தான் புழக்கத்தில் இருந்தது. இதனிடையில் செக்-கை நீங்கள் வங்கியில் சமர்ப்பிக்கும் வேளையில் ஒருசில காரணங்களால் அவை நிராகரிக்கப்படும். மேலும் வங்கிக் கணக்கில் போதிய அளவு தொகையானது இருப்பில்லை எனில் செக் பவுன்ஸ் ஆகும். இதற்கு வேறு சில காரணங்களாலும் செக்கானது ரிட்டர்ன் செய்யப்படும்.

எவ்வளவு தான் ஆன்லைன் பரிவர்த்தனைகள், யூபிஐ, QR ஸ்கேன் என நவீனமாக டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்து வந்தாலும் இப்போதுமே பெரிய பெரிய தொகைகளுக்கு காசோலைகள்தான் வழங்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் பல காரணங்களுக்காக செக் பவுன்ஸ் தொடர்ச்சியாக காணப்படுகிறது. இதுகுறித்த புது விதிமுறைகளை அரசாங்கம் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையில் ஒரு நபர் காசோலை வழங்கி, அவர் வழங்கிய காசோலை பவுன்ஸ் ஆகிவிட்டால் அவருக்கு புது கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்பது குறித்து நிதியமைச்சகம் கூறி வருகிறது. அண்மையில் நடைபெற்ற உயர்மட்ட சந்திப்பில் இதுபற்றிய விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டது.

உதாரணமாக ஒரு குறிப்பிட்ட வங்கியிலிருந்து நபர் ஒருவர் கொடுத்த செக் பவுன்ஸ் ஆகி விட்டால், அவரது வேற கணக்குகளில் உள்ள தொகையை பயன்படுத்தலாம். மேலும் அவருக்கு புது வங்கிகணக்குகள் திறப்பதற்கு தடைவிதிக்கப்படும் ஆகியவை பரிசீலனையில் இருக்கிறது. வங்கிகணக்கில் பணமின்றி செக் பவுன்ஸ் என்பது குற்றமான ஒன்று. அத்துடன் 1 நபருக்கு கொடுத்து, அது செக்பவுன்ஸ் ஆகிவிட்டால் உங்கள் மீது சட்ட நடவடிக்கையானது மேற்கொள்ள முடியும். அதேபோன்று உங்களுக்கு கொடுத்த செக்கணக்கில் தொகை இன்றி பவுன்ஸாகிவிட்டால் நீங்கள் காசோலை கொடுத்தவரின் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளலாம். இருப்பினும் நடைமுறைபடுத்த உள்ள புது விதிகளின்படி, சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்க்கொள்வதற்கு முன்பு வேறு காசோலை வழங்கியவரின் வேறு கணக்குகளில் இருந்து தொகையை பெறுவதற்கான விதிமுறையை அமல்படுத்தலாம் என கூறப்பட்டுள்ளது.

அனைத்து நபர்களுக்கும் CIBIL ஸ்கோர் மிக முக்கியமானது ஆகும். நீங்கள் வாங்கிய கடனுக்கு தவணைகளை உரியமுறையில் திருப்பி செலுத்தவேண்டும். கிரெடிட் கார்டு பயன்படுத்தினால் அதற்கு உரியதொகையை சரியாக செலுத்தவும் உள்ளிட்ட பல்வேறு விதங்களில் ஒரு நபரின் கிரெடிட்ஸ்கோர் நிர்ணயிக்கப்படும். இப்போது செக் பவுன்ஸானால், அக்காசோலை வழங்கிய நபர்களுக்கு அவர்களுடைய கிரெடிட்ஸ்கோர் உடன் அதனை இணைத்து விடலாம் எனும் யோசனையும் பரிசீலனையில் உள்ளது. ஆகவே நபர் ஒருவர் கொடுத்த செக் பவுன்ஸாகினால் அந்த பரிவர்த்தனையானது எதிர்மறையான பரிவர்த்தனையாக கணக்கிடப்பட்டு, CIBIL ரிப்போர்ட்டில் இணைக்கப்படும்.

இந்த விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டால், செக் வழங்குபவர்கள் அலட்சியமாக இருக்கமாட்டார்கள். அத்துடன் அனைத்து பவுன்ஸ் நிகழ்வுகளுமே நீதிமன்றம் வரையிலும் எடுத்து போகவேண்டிய தேவை இருக்காது எனவும் கூறப்படுகிறது. கணக்கில் பணமே இன்றி செக் தருகிறேன் என இனி ஏமாற்ற முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது. நாடு முழுதுமே செக்பவுன்ஸ் என 35,00,000 வழக்குகள் இன்னும் நிலுவையில் இருக்கும் நிலையில், உச்சநீதிமன்றம் ஒரு கமிட்டியை உருவாக்கி இதை உடனடியாக கவனிக்கவேண்டும், அனைத்து செக்பவுன்ஸ் வழக்குகளும் சரிபார்க்கப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |