தமிழ் திரையுலகில் ஆனந்தம் திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் லிங்குசாமி. அதன் பிறகு ரன், ஜி, சண்டைக்கோழி போன்ற பல படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார். கடைசியாக லிங்குசாமி இயக்கத்தில் சண்டக்கோழி 2 மற்றும் தீ வாரியார் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. கடந்த 2014 ஆம் வருடம் நடிகர் கார்த்தி, சமந்தா போன்றோர் நடிப்பில் எண்ணி ஏழு நாள் எனும் திரைப்படத்தை தயாரிப்பதற்காக இயக்குனர் லிங்குசாமியின் தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் பிவிபி கேப்பிட்டல்ஸ் என்ற நிதி நிறுவனத்திடம் ஒரு கோடியே மூன்று லட்சம் கடன் பெற்று இருந்தது.
இந்த கடனை திருப்பிக் கொடுக்காமல் அடுத்தடுத்து அவர்கள் பல படங்களை தயாரித்ததை அடுத்து அந்த நிறுவனத்திற்கு எதிராக பிவிபி கேப்பிட்டல் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் pvp நிறுவனத்திடம் பெற்ற ஒரு கோடியே மூன்று லட்சம் கடனை திருப்பி செலுத்தி இயக்குனர் லிங்குசாமிக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை தொடர்ந்து லிங்குசாமி ஒரு கோடியே மூன்று லட்சம் ரூபாய்காண காசோலைகளை பிவிபி கேப்பிட்டல் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளார். இந்த காசோலைகள் வங்கியில் போதிய பணம் இல்லாமல் திரும்பி வந்ததை அடுத்து இயக்குனர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர்களுக்கு எதிராக பிவிபி நிறுவனம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சேக் மோசடி வழக்கு தொடர்ந்துள்ளது.
மேலும் இந்த வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம் செக் மோசடி வழக்கில் இயக்குனர் லிங்குசாமி சகோதரர்களுக்கு ஆறு மாதங்கள் சிறை தண்டனையும் பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. அதே நேரம் மேல்முறையீடு செய்ய அவகாசம் அளித்து உத்தரவிட்டதாக அதன் பின் இது பற்றி அறிக்கை வெளியிட்டிருந்தால் லிங்குசாமி மேல்முறையீடு செய்து சட்டரீதியாக பிரச்சினையை சந்திப்போம் என தெரிவித்து இருந்த நிலையில் இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பத்தாயிரம் அபராத தொகையில் லிங்குசாமி செலுத்தியுள்ளார்.