Categories
மாநில செய்திகள்

செங்கம் சட்டமன்ற தொகுதி : மக்களின் எதிர்பார்ப்பு என்ன ?

விவசாயத்தில் குட்டி தஞ்சை என்று அழைக்கப்பட்ட பெருமை கொண்டது செங்கம். செங்கம் தொகுதியில் செங்கம், சாத்தனுர், தண்டராம்பட்டு ஆகிய இடங்கள் முக்கியமானவை. செங்கம் தொகுதி மக்கள் விவசாயத்தையும் , கூலி தொழிலை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகிறார்கள். செங்கம் தொகுதியில் கடந்த 1952 முதல் இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் திமுக 5 முறையும், அதிமுக 4முறையும் வெற்றி பெற்றுள்ளன. காங்கிரஸ் மூன்று முறையும், தேமுதிக ஒரு முறையும்,  ஜனதா கட்சி ஒருமுறையும் வாகை சூடி இருக்கிறது.

2016 தேர்தலில் திமுக சார்பில் மு.பெ.கிரி போட்டியிட்டு வென்றார். இந்த தொகுதியில் மொத்தம் 2,69,889 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் பெண் வாக்காளர்களே அதிகம். விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கும் செங்கம் தொகுதியில் பல ஆண்டுகளாக மழை குறைந்ததால் உழவு தொழில் நலிவை சந்தித்து வருகிறது. தண்ணீர் பிரச்சினையை தீர்க்க தென்பெண்ணை ஆற்றையும்  செய்யாற்றையும் இணைக்க வேண்டும். சாத்தனூர் அணையை தூர்வாரி நந்தன் கால்வாய் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கை.

தொழிற்சாலைகள் ஏதுமில்லாத செங்கத்தில் ஏற்கனவே இருந்த மேல்செங்கம் மத்திய விதை உற்பத்தி பண்ணையும் மூடப்பட்டுவிட்டது. இதனை திறந்து வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். விரிவாக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கின்றனர். மேல்சங்கத்தில் இருக்கிற அரசு பண்ணையை விரிவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி பல ஆண்டுகளாக மக்கள் அதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் இதுவரைக்கும் மேல்சங்கம் பண்ணையை விரிவாக்குவதற்கு அரசு அதில் பயன்படுத்துவதற்கு இன்றைக்கு தயாராக இல்லாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தரும் வகையிலும் ஒரு பெரிய ஒரு தொழிற்சாலை எத்தனையோ மாநிலங்களில் எத்தனையோ மாவட்டங்களில் பெரிய பெரிய தொழிற்சாலைகள் இருக்கிறது அதே போல வந்து செங்கம் பக்கத்துல ஒரு தொழிற்சாலை அமைக்க வேண்டும்.

செங்கம் சுற்று வட்டாரத்தில் அதிக அளவு மலர் சாகுபடி செய்யப்படுவதால், குளிர்பதன கிடங்கு மற்றும் வாசனை திரவிய ஆலை அமைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாகும். சாத்தனூர் அணையை பொலிவுற செய்து சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும். குப்பனந்தம் நீர்த்தேக்கம் மூலம் பரமனந்தல், கொட்டாவூர் புதுபட்டு, குயிலம், அன்வராபாத் ஆகிய ஊர்களுக்கும் நீர் தர வேண்டும் என தொகுதி மக்கள் கேட்கின்றனர்.

மலை கிராமங்களுக்கு போக்குவரத்து வசதி, ஜமுனாமரத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் ஆரம்ப சுகாதார நிலையம், முறையான சாலை வசதி,  செங்கத்திலிருந்து  ஜவ்வாது மலைக்கு பேருந்து வசதி என பல்வேறு கோரிக்கைகளுடன் தொகுதி மக்கள் காத்திருக்கின்றனர்.

Categories

Tech |