செங்கல்பட்டில் தடுப்பூசி உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மக்களவையில் அதிமுக உறுப்பினர் தம்பிதுரை வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக தம்பிதுரை பேசியபோது: தடுப்பூசிகள் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். எனவே தமிழ்நாட்டின் செங்கல்பட்டில் தடுப்பூசி உற்பத்தி செய்வதற்கு தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். செங்கல்பட்டில் தடுப்பூசி உற்பத்தி செய்வது என்பது மிகவும் முக்கியமான ஒன்று. கொரோனா முதல் அலையின் போதே கொரோனாவை கட்டுப்படுத்துவதில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு சிறப்பாக செயல்பட்டதாக அவர் தெரிவித்தார்.