செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று புதிதாக 48 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
சென்னையை தொடர்ந்து செங்கப்பட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. சென்னைக்கு அருகாமையில் இருப்பதால் அங்கு இருந்து வருபவர்களில் பாதிப்பு உயர்ந்து கொண்டே இருகிறது. நேற்று வரை 1,233 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதுவரை 615 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் 596 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா பாதித்த 11 பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் தற்போதைய நிலவரப்படி மேலும் 48 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,271ஆக உயர்ந்துள்ளது. சென்னைக்கு அருகில் இருக்கும் புறநகர் பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. பல்லாவரம், தாம்பரம், பரங்கிமலை உள்ளிட்ட பகுதிகளில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.