Categories
மாநில செய்திகள்

டெண்டர் இல்லாமல் மருத்துவ உபகரணங்கள் வாங்க அனுமதி – அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சட்டப்பேரவை தொடங்கியது. அதில், கொரோனா பாதித்த 3 பேரின் தற்போதைய நிலை என்ன? என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் கொரோனாவிற்கு ஒதுக்கப்பட்ட ரூ.60 கோடி நிதி போதாது, ரூ.500 கோடி ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இதற்கு பதில் அளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக 5 முறை அரசு உயர் அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். அமைச்சர் மற்றும் அரசு உயரதிகளுடன் ஆலோசனை நடத்தி முதல்வர் அறிவுரை வழங்கியுள்ளார். அரசு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளின் எண்ணிக்கையை உயர்த்த உத்தரவிடப்பட்டுள்ளது என விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களுக்கு அதிகமான தட்டுப்பாடு இருப்பது உண்மை. விதிமுறைகளை தளர்த்தி டெண்டர் இல்லாமல் மருத்துவ உபகரணங்கள் வாங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதில், செங்கல்பட்டில் ரூ.100 கோடியில் யோகா நேச்சுரோபதி மருத்துவமனை சர்வதேச தரத்தில் அமைக்கப்பட உள்ளது. யோகா நேச்சுரோபதி மருத்துவமனை அமைப்பதற்கான டெண்டர் பணிகள் முடிந்து தற்போது பணிகள் தொடங்கியுள்ளது. செங்கல்பட்டில் புதிய சிறப்பு சிகிச்சை பிரிவுகள் மற்றும் புதிய மருத்துவர்கள் நியமித்து தரம் உயர்த்தப்பட்டு வருகிறது .செங்கல்பட்டு மருத்துவ கல்லூரியில் மருத்துவ படிப்புக்கான இடம் 50ல் இருந்து 100ஆக அதிமுக ஆட்சியில் தரம் உயர்த்தப்பட்டுள்ளது என தகவல் அளித்துள்ளார்.

Categories

Tech |