செங்கல்பட்டு இரட்டை கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த 2 ரவுடிகள் காவல் துறையினரின் என்கவுண்டரில் உயிரிழந்தனர்.
செங்கல்பட்டு நகர காவல் நிலையம் அருகே நேற்று அப்பு கார்த்தி மற்றும் மகேசை நாட்டு வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் மைதீன் மற்றும் தினேஷ் இருவரும் கொடூரமாக கொலை செய்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.. இந்த நிலையில் காவல்துறை 4 தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தது..
இந்த நிலையில் திருப்புலிவனம் காட்டுப்பகுதியில் மைதீன் மற்றும் தினேஷ் இருவரும் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைக்க, காவல்துறையினர் அவர்களை உத்தரமேரூர் பகுதியில் வைத்து கைது செய்து அழைத்து வந்தபோது இருவரும் வழியில் தப்பிக்க முயற்சி செய்தனர்.. அப்போது தற்காப்புக்காக காவல் ஆய்வாளர் ரவிக்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் மாமண்டூர் பாலாறு அருகே ரவுடிகள் மைதீன், தினேஷ் ஆகிய இருவரை என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர்..
அதாவது, காவல்துறையினர் அவர்களை பிடிக்க முயன்றபோது, நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாக்கியதால் தற்காப்புக்காக காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டதில் தினேஷ், மைதீன் இருவரும் உயிரிழந்தனர்.. மேலும் ரவுடிகள் நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டு அரிவாளால் வெட்டியதில் காவல்துறையினர் இருவர் படுகாயமடைந்துள்ளனர்..
என் கவுண்டரில் இறந்த இருவர் மீது ஏற்கனவே கொலை உள்ளிட்ட 4 குற்ற வழக்குகள் இருக்கிறது.. இந்த என்கவுண்டர் ரவுடிகளுக்கு இடையே பெரும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது..