Categories
மாநில செய்திகள்

‘செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்’…. வானிலை தகவல்….!!!

தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை,செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது: வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய இலங்கை கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று பல மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகின்றது.

இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, தென்காசி, தேனி, திண்டுக்கல், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் இடியுடன் மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யும் என்று வானிலை தெரிவித்துள்ளது. சென்னையில் 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |