Categories
அரசியல்

செங்கல்பட்டு திமுக கோட்டை!…. ஜெயித்து விடுங்கள்…. அமைச்சர் அன்பரசன் அதிரடி பேச்சு….!!!!

செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, மறைமலை நகர் உள்ளிட்ட இடங்களில் நேற்று திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. அதில் ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், சட்டசபை, லோக்சபா தேர்தலில் அதிக ஓட்டுகளை பெற்றுள்ளோம். செங்கல்பட்டு திமுகவின் கோட்டையாக எப்போதும் இருக்கிறது.

செங்கல்பட்டில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் வகையில் பேருந்து நிலையம் வேறு இடத்தில் அமைக்கப்பட உள்ளது. பாதாளசாக்கடை திட்டம், குடிநீர் பிரச்சனை உட்பட பல பிரச்சனைகள் சரி செய்யப்படும். கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்குள் சிறு பிரச்சனை உள்ளதாக தெரிகிறது.

எனவே உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி அதற்கான தீர்வு காணப்படும். நாம் மட்டும் தேர்தலில் வெற்றி பெறவில்லை என்றால் நம்மை நாய் கூட மதிக்காது. இதை மனதில் வைத்து கொண்டு நாம் அனைவரும் தேர்தல் பணியில் தீவிரமாக செயல்பட வேண்டும். வேட்பாளர்கள் அனைவரும் காலை முதல் இரவு வரை கடுமையாக உழைத்தால் தான் வெற்றியை பெற முடியும்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |