சென்னைக்கு அடுத்து கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 800 செவிலியர்கள் பற்றாக்குறை இருப்பதாக புகார்கள் வந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் பல்வேறு கட்ட ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் அதிக அளவு கொரோனா தொற்று உள்ளது. இதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.
இந் நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 1040 செவிலியர்களை கொண்ட அரசு மருத்துவமனையில் வெறும் 152 செவிலியர்கள் மட்டுமே பணியாற்றுவதாக தகவல் வெளிவந்துள்ளது. இதையடுத்து அங்கு 800 செவிலியர்கள் பற்றாக்குறையாக இருப்பதாக அரசு மருத்துவமனையில் புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழக அரசு விரைந்து செயல்பட்டு காலிப்பணியிடங்களை நிரப்ப செவிலியர் சங்கம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.