செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 108 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. தமிழகத்திலேயே சென்னையில் தான் கொரோனா தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில் சென்னைக்கு அருகாமையில் இருக்கும் செங்கல்பட்டு மாவட்டத்திலும் கொரோனா தொற்றானது தீவிரமடைந்து வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை 3,271 பிற பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 1,597 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள தற்போது 1,640 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் செங்கல்பட்டில் இதுவரை கொரோனா பாதித்த 33 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிதாக 108 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,379 ஆக உயர்ந்துள்ளது.