செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று புதிதாக 86 பேர் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6633 ஆக இருந்தது. இதில் 3445 பேர் குணமடைந்து வீட்டு திரும்பியுள்ளார்கள். இதனால் 3068 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை 119 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிர் இழந்திருக்கிறார்கள்.
இன்று மேலும் 86 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்தால் மொத்த எண்ணிக்கையானது 6719 ஆக உயர்ந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நகராட்சிகளில் பகுதிகளியில் மட்டும் 59 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். தற்போது 15 நடமாடும் மருத்துவ குழுவினர் மாவட்ட முழுவதும் தீவிரமாக பரிசோதனை நடைபெற்று வருகின்றன.