தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து கடந்த மே மாதம் பிளஸ் 2 மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்வுகள் நடைபெற்றது. இதனையடுத்து தேர்வுகளுக்கான முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. அதில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 284 பள்ளிகளில் 32,690 பேர் பிளஸ் டூ தேர்வு எழுதியிருந்தனர். அதில் 30,514 தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து வெங்கம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மட்டும்100% தேர்ச்சிபெற்று உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதனை போலவே பத்தாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வை 36,521 பேர் தேர்வு எழுதினர். இதில் 31,647 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். மேலும் 9 அரசு பள்ளிகளில் மாணவ, மாணவியர் 100% தேர்ச்சி பெற்றிருந்தனர்.