தேனியில் தனது மோட்டார் சைக்கிளை திருடிய வாலிபரை உரிமையாளர் மடக்கிப்பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.
தேனி மாவட்டம் போடியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் வெற்றிவேல் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் வழக்கம்போல் தனது மோட்டார் சைக்கிளை நிறுவனத்திற்கு வெளியே நிறுத்தி வைத்துள்ளார். இதனை மர்ம நபர் திருடி சென்றதால் அவர் போடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இதனிடையே மர்ம நபர் அவரது மோட்டார் சைக்கிளை வெற்றிவேலின் கண் முன்னே ஓட்டி சென்றுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த வெற்றிவேல் அவரை துரத்தி சென்று மடக்கி பிடித்து தனது மோட்டார் சைக்கிளை வாங்கினார். மேலும் மர்ம நபரை காவல் நிலையத்தில் பிடித்து கொடுத்தார். இதனையடுத்து காவல்துறையினர் மர்ம நபரை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.