Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

செஞ்சதே தப்பு இதுல இப்படி வேற பண்ணியிருக்காரு…. சுங்கச்சாவடி ஊழியருக்கு நேர்ந்த சோகம்…. நெல்லையில் பரபரப்பு….!!

திருநெல்வேலியில் லாரி மோதியதில் சுங்கச்சாவடி ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிராமத்தில் மாரியப்பன் என்பவர் வசித்து வந்தார். இவர் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியிலிருக்கும் சுங்கச்சாவடியில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவர் சம்பவத்தன்று சுங்கச்சாவடியிலிருக்கும் நாகர்கோவில் கவுண்டரில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக திருநெல்வேலிக்கு வந்து கொண்டிருந்த லாரி மாரியப்பன் மீது பலமாக மோதியதோடு மட்டுமல்லாமல் நிற்காமலும் சென்றது.

இதில் தூக்கி வீசப்பட்ட மாரியப்பன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிர் இழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் மற்றொரு வாகனத்தில் விரைந்து சென்று லாரி டிரைவரை மடக்கிப் பிடித்தனர். இதனையடுத்து காவல்துறையினர் லாரி டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Categories

Tech |