Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

செடிகளுக்கு இடையே கிடந்த சடலம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….. பெரும் சோகம்…!!

அரசு பேருந்து ஓட்டுநர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அகரம்பள்ளிப்பட்டு பகுதியில் பேருந்து ஓட்டுநரான முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அவர் அகரம்பள்ளிப்பட்டு பகுதியில் இருக்கும் ஆற்றில் இறங்கிய போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் அடித்து செல்லப்பட்டுள்ளார். இதுகுறித்து அறிந்த உறவினர்களும், தீயணைப்பு வீரர்களும் முருகனை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று மதியம் சுத்தமலை பகுதியில் இருக்கும் தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் இருக்கும் செடியின் நெடுக்கில் முருகனின் உடல் கிடைப்பதை பார்த்த பொதுமக்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் முருகனின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |