பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகும் படத்திற்கு செட் அமைக்க மட்டும் 106 கோடி செலவாகியுள்ளது.
பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ராதே ஷ்யாம் என்ற படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியிடப்பட உள்ளது. யுவி கிரியேஷன்ஸ் மற்றும் கோபி கிருஷ்ணா மூவிஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் பிரபாஸ் ஹீரோவாகவும், அவருக்கு ஜோடியாக பூஜை செய்யவும் நடித்து வருகின்றனர். இந்த படத்தை ராதா கிருஷ்ணகுமார் இயக்கிவருகிறார்.
மிகப்பெரிய பட்ஜெட்டில் இப்படம் உருவாவதாக தகவல் வெளியானது. அதன்படி இந்த படத்திற்கு மருத்துவமனை காட்சி ஒன்றிற்காக சுமார் 26 செட்டுகள் போடபட்டதாகவும், அதற்காக 106 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. மேலும் இந்த படத்திற்காக போடப்பட்ட மருத்துவமனை செட்டை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்திக்கொள்ள படக்குழுவினர் நன்கொடையாக வழங்கியுள்ளனர்.