Categories
அரசியல் மாநில செய்திகள்

செத்தாலும் சாதி விடல…! முதல்வர்ட பேசுவோம்… தமிழக அரசை நம்பும் திருமா …!!

பொது சுடுகாடு, பொது மயானம் என்பது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும், தமிழக அரசு அது குறித்து தீவிரமாக சிந்திக்கும் என்று நான் நம்புகிறேன் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக இருந்த தோழர் ரவிக்குமார் அவர்களின் அன்றைய முதல்வர் கலைஞரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று வண்ணார் சமூகத்தினருக்கு என்று ஒரு நல வாரியம் அமைக்க கோரிக்கை விடுத்தார். அதன் அடிப்படையில் அன்றைக்கே நல வாரியம் அமைக்கப்பட்டது.

ஆனால் அதில் புதிரை வண்ணார் சமூகத்தைச் சார்ந்தவர்கள் கிறிஸ்தவத்தை சார்ந்து இருப்பதால்  அந்த நலவாரியத்தில் உறுப்பினராக கூட ஆக முடியாத நிலை உள்ளது. அத நல வாரியத்தின் புதிரை வண்ணார் சமூகத்தினரையும் உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம். தற்போதும் சட்டமன்றத்தில் இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் பேசுவோம், முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் செல்வோம்.

காலம் காலமாக நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம் தனி சுடுகாடு கூடாது, பொது சுடுகாடு, சமத்துவ சுடுகாடு அமைக்கப்பட வேண்டும். கிறிஸ்தவ கல்லறைகளில் கூட தலித் கிறிஸ்தவர், இதர கிறிஸ்தவர் என்கிற பெயரில் பல இடங்களில் சுடுகாட்டிலும் பிரச்சனைகள் எழுந்து அது தொடர்பாக நாங்கள் போராட்டங்களை நடத்தியிருக்கிறோம், குறிப்பாக திருச்சிராப்பள்ளியில் இந்த பிரச்சனை எழுந்தது, ஆகவே பொது சுடுகாடு என்பது மக்களின் நீண்டகால கோரிக்கை.

இறந்த பிறகும் மனிதனை சாதி விடுவதில்லை என்கிற அளவுக்கு உயர்நீதிமன்ற நீதிபதி தனது கவலையை வெளிப்படுத்தக்கூடிய அளவுக்கு இங்கே சாதி தலைவிரித்தாடுகிறது. ஆகவே அண்மையில் உயர்நீதிமன்றம் ஒரு வழக்கில் சொல்லியிருக்கிறார்கள் பொது சுடுகாடு, பொது மயானம் என்பது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும், தமிழக அரசு அது குறித்து தீவிரமாக சிந்திக்கும் என்று நான் நம்புகிறேன். இது தொடர்பாகவும் முதல்வரின் கவனத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உரிய நேரத்தில் கொண்டு போய் சேர்க்கும் என தெரிவித்தார்.

Categories

Tech |