Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“செத்த எலி சாம்பார்” சமைத்த தனியார் ஹோட்டல்…. கோவையில் பரபரப்பு…!!

ஹோட்டல் சாம்பாரில் செத்த எலி கிடந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியை சேர்ந்தவர் திவ்யா. இவருடைய தம்பி கார்த்திகேயன் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் திவ்யா சம்பவத்தன்று சாப்பிடுவதற்காக அரசு மருத்துவமனை எதிரே உள்ள தனியார் ஓட்டலில் ஆப்பம் மற்றும் சாம்பார் பார்சல் வாங்கி உள்ளார். பின்னர்  அதை ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து இருவரும் சாப்பிட தொடங்கிய போது சாம்பாரில் கருப்பு நிறத்தில் ஏதோ ஒன்று கிடந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் என்னவென்று பார்த்தபோது எலி ஒன்று செத்து கிடந்துள்ளது.

இதையடுத்து திவ்யா தனது குடும்பத்தினருடன் ஹோட்டலுக்கு சென்று சாம்பாரில் எலி விழுந்தது குறித்து கேட்டபோது ஹோட்டல் நிர்வாகம் மன்னிப்பு கேட்டுள்ளது. ஆனாலும் அவர்கள் சமாதானம் அடையாமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக உணவுத்துறை அதிகாரிகளுக்கு  தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து ஹோட்டல் ஊழியர்கள் கடையின் கதவை மூடி உள்ளனர். மேலும் இது குறித்து உணவுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து உணவு உணவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகையில், “அரசு மருத்துவமனை அருகே உள்ள ஹோட்டலில் வாங்கிய சாம்பாரில் செத்த எலி கிடந்தது குறித்து சம்பந்தப்பட்ட ஹோட்டல் ஊழியர்களிடம் விசாரணை நடத்துகிறோம். தற்போது அந்த ஹோட்டல் மூடப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |