நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தேமுதிக சார்பில் பிரேமலதா விஜயகாந்த் கரூர் நகராட்சியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, “கரூர் நகராட்சி பகுதியில் ஆளும் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் மற்ற கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களை மிரட்டுகின்றனர். திமுகவின் அடாவடித்தனமும் ரவுடித்தனமும் மக்களுக்கு நன்றாக தெரியும். எனவே திமுகவை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். கரூர் மாவட்ட எம்எல்ஏவுக்கு தெரியாத கட்சியே கிடையாது. அனைத்து கட்சிகளுக்கும் சென்று தற்போது திமுகவில் தஞ்சம் புகுந்துள்ளார். சொல்ல முடியாது அவர் திடீரென தேமுதிகவிற்கு வருவதற்கு கூட வாய்ப்பு உள்ளது என நகைச்சுவையாக கூறினார். அதோடு யாரையும் குறை கூறி வாக்கு சேகரிக்க வேண்டும் என்ற அவசியம் தேமுதிகவுக்கு இல்லை. ஆனால் ஆளும் கட்சியின் குறைகளை சொல்லாமலும் இருக்க முடியவில்லை.
அதை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியது தேமுதிகவின் கடமையாகும். பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து அதன் மூலம் ஆட்சியைப் பிடிக்க வேண்டிய அவசியம் கேப்டனுக்கு இல்லை. கேப்டன் சொன்னால் அதை செய்து முடிப்பார். மக்களை முட்டாள்களாக்க வேண்டும் என்பதற்காக 517 வாக்குறுதிகளை கொடுத்தால் முதல்வர். ஆனால் தற்போது வரை எந்த வாக்குகளும் நிறைவேற்றப்படவில்லை. ஆனால் 75 சதவிகித வாக்குகளை நிறைவேற்றி விட்டோம் என பெருமையாக கூறிக் கொள்கின்றனர் திமுகவினர். ஆட்சி அதிகாரம் பணபலம் போன்றவை இருப்பதால் மக்களை ஏமாற்றி விடலாம் என எண்ணும் ஆளுங்கட்சிக்கு மக்கள் தக்க பதிலடி கொடுக்க வேண்டும். திமுகவிற்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடுத்து பாருங்கள் நாங்கள் கட்சியில் தொடங்கியதற்கான முழுமையான நோக்கம் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. அதற்கு மக்களாகிய நீங்கள் ஒரு வாய்ப்பு கொடுத்தால் அதனை நிறைவேற்றிக் காட்டுவோம்.” என அவர் கூறினார்.