Categories
அரசியல் மாநில செய்திகள்

செந்தில் பாலாஜியை சீண்டும் அண்ணாமலை…. என்ன சொன்னார் தெரியுமா…? வெடித்தது சர்ச்சை…. !!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகிய இருவருக்கும் அவ்வப்போது வார்த்தை போர் நடப்பது வழக்கம். ஒருவருக்கொருவர் மாறி மாறி விமர்சனம் செய்து வருவதை செய்தியாக வெளிவந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை மீண்டும் சீண்டியுள்ளார் பாஜக தலைவர் அண்ணாமலை. அண்ணாமலை தான் வெளியிட்டுள்ள ட்வீட்டில், பால்வளத்துறை அமைச்சரை CM ஸ்டாலின் பாராட்டியதை குறிப்பிட்ட அவர், ஆவின் நெய்யின் விலை மட்டும் கடந்த 9 மாதங்களில் 22% உயர்ந்துள்ளது. அடுத்து என்ன,

மின்வாரியத்தின் வருவாய் உயர்ந்ததற்கு சாராய அமைச்சரை பாராட்டவுள்ளீரா? என்று கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |