Categories
அரசியல் மாநில செய்திகள்

செந்தில் பாலாஜி சொல்வதை ஏற்றுக்கொண்டு முதல்வர் ஸ்டாலின் பதவி விலகுவாரா…? பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி..!!!!!!

கோவை உக்கடம் அருகே நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்பு விபத்து பற்றி தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க முதல்வர் ஸ்டாலின் பரிந்துரை செய்துள்ளார். கோவை சிலிண்டர் வெடிப்பு வழக்கின் தன்மையையும் அதில் பன்னாட்டு தொடர்புகள் இருக்க வாய்ப்பு இருப்பதையும் கருத்தில் கொண்டு இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கும் மாற்றப் பரிந்துரைப்பதாகவும் மாநிலத்தின் பொது அமைதி சட்டம் ஒழுங்கிற்கு ஊறுவிளைவிக்கும் செயல்களை தடுப்பதற்கு உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இந்த சிலிண்டர் வெடிப்பு பயங்கரவாதிகளின் தற்கொலை படை தாக்குதலாக இருக்கலாம் என கூறிய தமிழக பாஜக தலைவர் அடுக்கடுக்கான பல கேள்விகளை முன் வைத்துள்ளார் மேலும் சில ஆதாரங்களை தன்னிடம் இருப்பதாகவும் கூறியுள்ளார். அதன் தொடர்ச்சியாக புலன் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது போலீசுக்கு முன்பே அண்ணாமலை சில தகவல்களை வெளியிட்டது ஏன் என்ன கேள்வி எழுப்பி அமைச்சர் செந்தில் பாலாஜி தேசிய புலனாய்வு முகமை முதலில் விசாரிக்க வேண்டிய நபர் அண்ணாமலை தான் என தெரிவித்துள்ளார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமைச்சர் செந்தில் பாலாஜி சொல்வதை ஏற்றுக்கொண்டு முதல்வர் ஸ்டாலின் பதவி விலகுவாரா என அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

இது பற்றி அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் திமுக அரசின் சாராய அமைச்சர் அரசுக்கு தெரியாதது அண்ணாமலைக்கு எப்படி தெரியும் என கேள்வி எழுப்பியுள்ளார். இதனை அடுத்து பொதுமக்களும் அரசு இயந்திரமும் எதை நோக்கி நகர்கிறது என்பதை இது வெளிப்படுத்துகிறது அரசின் இயலாமையை வெளிப்படுத்தும் சாராய அமைச்சர் சொல்வதை ஏற்றுக்கொண்டு முதல்வர் ஸ்டாலின் பழனி பதவி விலகுவாரா என கேள்வி எழுப்பி இருக்கிறார். முன்னதாக தமிழ்நாட்டின் மத கலவரங்களை ஏற்படுத்தி விட முடியாதா அதனால் மக்கள் அடித்துக் கொள்ள மாட்டார்களா அதன் மூலம் தனக்கு அரசியல் ஆதாயம் கிடைத்து விடாதா, என ஆடு வேடம் அணிந்து தெரியும் குள்ள நரிகள் சமத்துவம் மிளிரும் மண்ணில் ஒருபோதும் நிறைவேறாது என கோவை சம்பவம் தொடர்பாக அண்ணாமலையை செந்தில் பாலாஜி விமர்சனம் செய்திருந்தார். இதனை அடுத்து தீபாவளி பண்டிகைக்கு டாஸ்மாக் மூலமாக வந்த வருமானத்தை சுட்டிக்காட்டிய பத்திரிகையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதை குறிப்பிட்டு சாராய அமைச்சர் என்ற வார்த்தையை உபயோகித்து அவரை அண்ணாமலை விமர்சனம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |