சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, முதலமைச்சர் ஸ்டாலின் மின்வாரிய துறையுடன் தொடர்ந்து மேற்கொண்டுவரும் ஆய்வால் மின் வாரியத்துக்கு ரூபாய் 2,200 கோடி வரை சேமிப்பு உருவாகியுள்ளது. இதுவரை 98 ஆயிரத்து 157 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. 8,905 புதிய மின் மாற்றிகள் அமைக்கும் பணி ஏறத்தாழ முடிவடைந்து விட்டது.
தமிழகத்துக்கு நாள் ஒன்றுக்கு 70 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படுகிறது. மத்திய அரசு 50 ஆயிரம் டன் மட்டுமே தரும் நிலையில் எஞ்சியளவு நிலக்கரியை உருவாக்க முதற்கட்டமாக பணி தொடங்கியுள்ளது. கடந்த 2006ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வடசென்னை நிலக்கரி தொழிற்சாலை பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்து விட்டன. இன்னும் சில காலங்களில் அதில் நிலக்கரி உற்பத்தி செய்யப்படும் பணி தொடங்கி விடும்.இவ்வாறு அவர் கூறினார்.