அமெரிக்க மக்கள் அனைவருக்கும் உண்மையை பாதுகாப்பதற்கும் பொய்யை வெல்லவும் கடமை இருபதாக ஜோபைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் நடைபெற்ற நாடாளுமன்ற வன்முறையை தூண்டிய காரணத்திற்காக முன்னாள் அதிபர் டிரம்ப்பிற்கு எதிராக பதவி நீக்க தீர்மானமானது பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து பதவி நீக்க விசாரணையிலிருந்து ட்ரம்பை செனட்சபை விடுவித்துள்ளது. இதற்கு பதில் அளித்துள்ள ஜோபைடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அனைத்து அமெரிக்கர்களும் குறிப்பாக நாட்டின் தலைவர்கள் உண்மையை பாதுகாப்பதற்காகவும் பொய்யை வெல்வதற்காகவும் கடமை மற்றும் பொறுப்பு இருக்கிறது. இதன் மூலமாகத்தான் மக்களுக்குள் உண்டான போரை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டினுடைய ஆன்மாவை மீட்க முடியும். இதுதான் நமது வருங்கால பணி.
இந்த பணியை அனைவரும் இணைந்து செயலாற்ற வேண்டும். அமெரிக்கா வன்முறை மற்றும் தீவிரவாததிற்கான இடம் அல்ல என்று தெரிவித்துள்ளார். அதாவது செனட் சபையில் பதவி நீக்குவதற்கான தீர்மானம் வெற்றி பெற மூன்றில் இரண்டு மடங்கு உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும். இந்நிலையில் பதவி நீக்க விசாரணையின் போது குடியரசு கட்சி உறுப்பினர்கள் பெரும்பாலானோர் ட்ரம்பிற்கு ஆதரவாக பேசியுள்ளனர்.
இதனால் பதவி நீக்க தீர்மானமானது 57-43 என்ற விதத்தில் தோல்வியை பெற்றுள்ளது. எனினும் குடியரசு கட்சி உறுப்பினர்கள் 7 பேர் பதவி நீக்க தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். இதனால் டிரம்ப் அடுத்த தேர்தலில் போட்டியிட முடியாத வகையில் பதவி நீக்க தீர்மானம் முடிவு செய்யப்பட்டுள்ளது.