சென்டிரல் – அரக்கோணம் இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் மின்சார ரயில்களின் சேவை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை சென்டிரல் – அரக்கோணம் இடையே பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதன் காரணமாக மின்சார ரயில் சேவைகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு கூறியதாவது, சென்னை சென்டிரல் – அரக்கோணம் இடையே காலை 8:20, 9 50 மணி மற்றும் 11 மணிக்கு இயங்கும் மின்சார ரயில்கள் நாளை (செவ்வாய்க்கிழமை) மற்றும் ஜூன் 1 ஆம் தேதிகளில் கடம்பத்தூர் – அரக்கோணம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகின்றது. சென்னை – அரக்கோணம் இடையே காலை 9:10 மணிக்கு இயங்கும் மின்சார ரயில் நாளை (செவ்வாய்க்கிழமை) மற்றும் ஜூன் 1-ம் தேதிகளில் திருவள்ளூர் – அரக்கோணம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகின்றது.
சென்டிரல் – திருத்தணி இடையே காலை 10 மணிக்கு இயங்கும் மின்சார ரயில் நாளை (செவ்வாய்க்கிழமை) மற்றும் ஜூன் 1-ம் தேதி திருவள்ளூர் – திருத்தணி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகின்றது. அரக்கோணம் -சென்டிரல் இடையே காலை 10 மணி, 11.10 மணி மற்றும் 12 மணி, 1.50 மணிக்கும், திருத்தணி – சென்டிரல் இடையே 10:15 மணி, 12 .35 மணிக்கும் இயங்கும் மின்சார ரயில்கள் நாளை(செவ்வாய் கிழமை), ஜூன் ஒன்றாம் தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகின்றது. இந்த ரயில்களுக்கு பதில் கடம்பத்தூர் – சென்டிரல் இடையே 10:25, 11.35 ,1:25 மணிக்கும், திருவள்ளூர்- சென்டிரல் 11:10 மற்றும் மதியம் 12.35 மணிக்கும், அரக்கோணம் – சென்டிரல் பெரிய மதியம் 1.50 மணிக்கும் பயணிகள் சிறப்பு ரயில்கள் மேற்கண்ட தேதியில் இயங்க உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.