சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது “சென்ட்ரல் சதுக்கத்தில் ரூபாய்.400 கோடி செலவில் பல திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பிரமாண்ட 2 டவர் கட்டிடங்கள் அமைக்கும் பணிகளானது நடந்து வருகிறது. இவற்றில் 3 அடித்தளம், 1 தரை தளம், 15 மாடிகளுடன் டவர் கட்டிடம் அமைக்கப்படுகிறது.
600 கார்கள், 1,600 மோட்டார்சைக்கிள்கள் நிறுத்தும் அடிப்படையில் பூமிக்கு கீழே பிரமாண்ட வாகனநிறுத்தம் வசதி அமைக்கப்பட இருக்கிறது. இப்போது இப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அத்துடன் 7 மாடிகளுடன் இன்னொரு டவர் கட்டிடம் கட்டப்படவுள்ளது. இதில் ஷாப்பிங்மால், தியேட்டர்கள், விளையாட்டு திடல்கள், வணிக நிறுவன அலுவலகங்கள், உணவகங்கள் மற்றும் பல்வேறு சிறப்பு அம்ச வசதிகள் உருவாக்கப்படஇருக்கிறது என்று அவர் கூறினார்.