Categories
சென்னை மாநில செய்திகள்

சென்ட்ரல் – திருவள்ளூர் இடையே மின்சார ரயில் ரத்து…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதனால் சாலைகள் அனைத்திலும் மழைநீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடுகிறது. அதுமட்டுமல்லாமல் ரயில் தண்டவாளங்களில் மழைநீர் தேங்கியுள்ளது ரயில்கள் சில ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் கனமழை பெய்து வருவதால் பல்வேறு ரயில்கள் இயக்கம் தொடர்பாக பயணிகள் விவரம் அறிய செல்போன் எண்களை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி 8300052104 என்ற எண்ணில் ரயில்கள் இயக்கம் தொடர்பான தகவல்களை அறியலாம்.

இந்நிலையில் தொடர் கனமழையால் தண்டவாளத்தில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் சென்ட்ரல் -திருவள்ளூர் இடையே மின்சார ரயில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கடற்கரை மற்றும் செங்கல்பட்டு இடையில் ஞாயிறு கால அட்டவணைப்படி மின்சார ரயில் இயங்கும் எனவும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |