சென்னை சென்ட்ரல் – மைசூர் இடையே கடந்த 12-ம் தேதி தொடங்கப்பட்ட வந்தே பாரத் ரயில் சேவை புதன்கிழமை தவிர மீதமுள்ள வாரத்தில் 6 நாட்களும் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் முற்றிலும் குளிர்சாதன வசதியுடன் கூடிய சொகுசு இருக்கைகள் போன்ற பல்வேறு வசதிகள் பயணிகளுக்கு அளிக்கப்படுகிறது. மேலும் இந்த ரயிலுக்கு பயணிகளிடையே அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த ரயிலில் “எக்சிகியூட்டிவ்” சேர்கார் என்ற 2 வகுப்புகள் உள்ளது. இந்த ரயிலின் சேவை தொடங்கிய 10 நாட்களிலேயே பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் சென்னையில் இருந்து மைசூர் சென்ற ரயில் எக்சிகியூட்டிவ் வகுப்பில் சராசரியாக 147% நிரம்பியுள்ளது. இதனையடுத்து இடைநிறுத்தங்களில் இறங்கி ஏறும் பயணிகளின் அடிப்படையிலும் பயணம் செய்த மொத்த பயணிகள் இருக்கை வசதி அடிப்படையில் சதவீதம் கணக்கிடப்பட்டுள்ளது.