சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மதியம் ஒரு மணி அளவில் மர்ம நபர் ஒருவர் செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு பேசி போனை துண்டித்தார். இதனால் உடனே ரயில் நிலைய காவல்துறையினருக்கு உடனடியாக எச்சரிக்கை தகவல் கொடுக்கப்பட்டது. இதனால் ரயில் நிலைய வளாகத்திற்குள் போலீசார் மோப்ப நாய்களோடு விரைந்து ரயில் நிலையம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த மர்ம நபர் யார் என்று கண்டறிய விசாரணை நடத்தப்பட்டதில் அந்த நபர் தாம்பரத்திலிருந்து பேசியது தெரியவந்துள்ளது. மேலும் ரயில் நிலையத்தில் 100இக்கும் மேற்பட்ட காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். ரயில் பயணிகளின் உடைமைகளை இரண்டு மோப்ப நாய்கள் கொண்டு தீவிர சோதனை இட்டனர். சுமார் ஐந்து மணி நேர விசாரணைக்கு பிறகு மிரட்டல் விடுக்கப்பட்டது வதந்தி என்று தெரியவந்துள்ளது. இதனையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விட்ட நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மற்றும் அதனை தொடர்ந்து நடைபெற்ற சோதனையால் ரயில் நிலையம் முழுவதும் பரபரப்பாக இருந்தது.