Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“சென்னிமலையில் சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு கிரிவலம்”… சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு அன்னதானம்…!!!

சென்னிமலை அருகே இருக்கும் பல ஊர்களில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு விழா நடைபெற்றது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலையில் சித்ரா பவுர்ணமி முன்னிட்டு அறக்கட்டளை சார்பாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்னிமலையின் கிரிவலம் சுற்றி வந்தார்கள். கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. சாமி தரிசனம் செய்ய வந்த மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து சென்னிமலை அருகே இருக்கும் எக்கட்டாம்பாளையம் மாரியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா நடைபெற்றது. இதனால் நாட்டார் ஈஸ்வரர் கோவிலுக்குச் சென்று காவிரி  நீர் எடுத்து வந்து நேற்று இரவு மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

இதையடுத்து தீர்த்த குடம் எடுக்கப்பட்தது. அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு தீர்த்த குடங்களுடன் மக்கள் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். அதன்பிறகு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. சென்னிமலை அருகே இருக்கும் புதுப்பாளையம் ஊராட்சியை சேர்ந்த சோழி அம்மன் கோவிலில் சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு பூஜைகள் நடத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.

Categories

Tech |