Categories
மாநில செய்திகள்

சென்னைக்கு அலெர்ட்…! மீண்டும் கடும் கட்டுப்பாடு…. மத்திய சுகாதாரத்துறை பரபரப்பு கடிதம்…!!!!

சென்னையில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் அனைவரும் கட்டாயமாக கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. அதுமட்டுமின்றி மாஸ்க் அணிதல்,, சமூக இடைவெளி, கிருமிநாசினி பயன்படுத்துதல் ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள 39 ஆயிரம் தெருக்களில் 507 தெருக்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே அந்த பகுதிகள் கட்டுப்பட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அசோக் நகர் 19வது தெரு தெருவில் 10 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் அந்த பகுதி மட்டும் கட்டுப்பாடு பகுதியாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அந்த பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக சுகாதாரத்துறை செயலருக்கு மத்திய சுகாதாரத்துறை செயலர் கடிதம் எழுதியுள்ளார். அதில், சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |