தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து இருப்பதால் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தஞ்சை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்சு அலார்ட் விடுக்கப்பட்டிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதன் எதிரொலியால் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னை மழை பற்றி தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளதாவது, இன்று மேகக் கூட்டங்கள் நெருங்கி வருவதை பார்க்கும் போது சென்னைக்கு ஒரு நீண்ட நெடிய நாளாக அமையும் என எதிர்பார்க்கலாம் இன்று வட சென்னை காட்டிலும் தென் சென்னை கூடுதலாக மழை பெறும். மேலும் வடக்கடலோர மாவட்டங்களில் இருந்து மேக கூட்டங்கள் இன்று ஒரு வேளை உள் மாவட்டங்களை நோக்கி நகரக்கூடும் உதாரணமாக ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்.
இதனை அடுத்து பாண்டிச்சேரி, கடலூர் போன்ற பகுதிகளிலும் இன்றைய மழை விருந்தில் பங்கேற்கலாம் ஒரு வேலை மழை பெய்யாவிட்டால் நாளை நிச்சயமாக பெய்யும். பெரம்பூரை தொடர்ந்து கத்திவாக்கம் பகுதியில் 161 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது. இதில் நல்ல செய்தி என்னவென்றால் மழை நாளை முதல் மற்ற மாவட்டங்களுக்கு இடம் பெயர்கிறது. இதனால் நாளை முதல் சென்னையில் மழை படிப்படியாக குறைக்கும் மேலும் இன்று பெய்யும் மழையை காட்டிலும் நாளை மழை குறையும் எனக் கூறியுள்ளார்.