காற்றழுத்த தாழ்வு மண்டலமானது 18 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று இருந்தது. தற்போது சென்னைக்கு தென்கிழக்கு திசையில் 150 கிலோ மீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது 18 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக அறிவித்துள்ளது. இது நாளை அதிகாலை சென்னை- புதுச்சேரி இடையே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.